தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் திரைப்படத்தில் கதாநாயகனாகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை திரைப்படத்தில் வெளி காட்டியதன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் பொதுவாக நல்ல கதையம்சம் உள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது கோடியில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படத்தில்தான் பணம் வாங்காமல் இசையமைத்து தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தானக்கு உள்ள பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு படத்தில் இலவசமாக பணியாற்றி வருவதாக கூறி உள்ளார் இதனை தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் தீபாவிடம் விஜய் ஆண்டனி அவர்கள் கூறியுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த தகவல் மூலமாக மிகப்பெரிய கேள்வி உருவாகிவிட்டது. ஏனெனில் தற்போது தமிழ் சினிமாவில் 2 சங்கம் இருப்பதால் விஜய் ஆண்டனி எந்த சங்கத்திற்கு இலவசமாக பாடம் நடித்து கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து சிவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது நூறு உறுப்பினர்களை கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தான் விஜய் ஆண்டனி தனது படத்தை இலவசமாக நடித்துக் கொடுப்பார் என கூறியது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எங்களுக்கு வேண்டாம் என்றும் நிராகரித்துவிட்டார்.
இதனால் இந்த செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இவர் எதற்கு முதலில் எங்களுக்கு இந்த திரைப்படம் வேண்டாம் என்று கூறினார் என்பதும் சந்தேகத்திற்கு உள்ளது.