48வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜய் ஆண்டனியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கார்கள் மட்டும் இத்தனையா..

vijay antony
vijay antony

தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் பொதுவாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் படங்களை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவருடைய படங்களில் இடம்பெறும் குத்து பாடல்கள், ரொமான்டிக் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்பொழுது முழுவதுமாக ஹீரோவாக நடிப்பதில் விஜய் ஆண்டனி ஆர்வம் காட்டி வருகிறார். இவருடைய படங்களுக்கு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல்  பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது விஜய் ஆண்டனி நடிப்பில்  சமீபத்தில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்பொழுது விஜய் ஆண்டனி தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும்  விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு 50 கோடி உள்ளதாம்.

மேலும் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பல கோடி மதிப்புள்ள பங்களாக்களை சொந்தமாக வைத்திருக்கிறாராம். விஜய் ஆண்டனி காரின் மீது அதிக ஆர்வம் உடைய காரணத்தினால் விலை உயர்ந்த கார்களை வாங்கி வருகிறாராம். அப்படி விஜய் ஆண்டனி வைத்துள்ள கார்களில் மிகவும் விலை உயர்ந்தது பிஎம்டபிள்யூ.

மேலும் இது தவிர மூன்று உயர்தர சொகுசு கார்களை வைத்திருக்கிறாராம். விஜய் ஆண்டனியின் மனைவி ஃபர்கானா தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வரும் நிலையில் விஜய் ஆண்டனியின் பெரும்பாலான படங்களை அவர்தான் தயாரித்து வருகிறார்.

சமீப காலங்களாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு ஹிட் அடிக்காமல் இருந்து வரும் நிலையில் இதற்கு மேல் கண்டிப்பாக சினிமாவில் அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களை தந்து மேலும் உயர்வாரென ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.