Vijay Antony: தன்னுடைய மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பள்ளி மாணவர்கள் எதனால் தவறான முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறிவரும் விஜய் ஆண்டனி படங்களிலும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் உடையவர்.
அப்படி இவர் கலந்து கொல்லம் பெரும்பாலான போட்டிகளில் ஊக்குவிக்கும் வகையில் பேசி இருப்பார். அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் பொழுது சமீப காலங்களாக இந்த தற்கொலை எண்ணங்கள் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது இது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் கூறிய விஜய் ஆண்டனி, தற்கொலை எண்ணங்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தான் இதற்கு பலியாகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவருடைய பெற்றோர்கள் தான் அவர்களை எப்பொழுதும் படி படி என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தமாக இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் பள்ளி முடிந்த வீட்டுக்கு வந்ததும் படி படி என்றால் எப்படி…
அவர்கள் படிப்பை தவிர வேறு எந்த விஷயத்தையும் உணர்வு அல்லது அனுபவிக்கவோ நாம் அனுமதிப்பது கிடையாது. பெற்றோர்கள் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும் பள்ளி மாணவர்களை குழந்தைகளை சுதந்திரமாக வளர விட வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளார். ஆனால் விஜய் ஆண்டனியின் மகளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து நடிகர் விஜய் ஆண்டனி தான் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு காரணம் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இந்த தகவலை வெளியிட்ட நபர் மீது மான நஷ்ட வழக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.