Vijay Antony in a 20 degree cold cattle shed in Switzerland: தமிழ் திரையுலகில் 2013ஆம் ஆண்டு வெளியான மூடர் கூடம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் நவீன். இந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பின் மூலமும் இயக்கத்தின் மூலமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இந்த படத்தின் சிறந்த வசனத்திற்கான விருதையும் பெற்றார் இயக்குனர் நவீன்.
இதனைத்தொடர்ந்து நடுவில் சில வருடங்கள் திரைப்படங்கள் எதுவும் எடுக்காமல் இருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த கொளஞ்சி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் அறிமுகமானார். இந்தத் திரைப்படமும் அவருக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
மேலும் இதனைதொடர்ந்து தற்போது இவர் அருண் விஜய், விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோரை வைத்து அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ஆண்டனி பற்றி சில கருத்துகளை பதிவிட்டுள்ளார். “ஸ்விட்சர்லாந்தில் மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டு கொள்ளாதவர் ரஷ்யாவின் 20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்தது தான் பெரிய விஷயம்” என அவர் பதிவில் கூறியுள்ளார்.
ஸ்விச்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை
சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரியவிஷயம்@vijayantony ?? pic.twitter.com/hC4brii5Oh— Naveen Mohamedali (@NaveenFilmmaker) May 15, 2020