“மாடல் அழகிகளை” ஹீரோயின்னாக மாற்றிய விஜய் ஆண்டனி மொத்தம் இத்தனை பேரா.? லிஸ்ட் இதோ

Vijay antony
Vijay antony

Vijay antony : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ விஜய் ஆண்டனி இவர் முதலில் இசையமைப்பாளராக இருந்து பின் ஹீரோ அவதாரம் எடுத்தார் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்படிப்பட்ட விஜய் ஆண்டனி தன்னுடைய படங்களில் பெரிதும் மாடல் அழகிகளை தான் ஹீரோயின்னாக நடிக்க வைத்து உள்ளார் அவர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

meenachi chaudhri
meenachi chaudhri

1. மீனாட்சி சௌந்தரி  : பிரபல மாடல் அழகியான இவர் 2018 ஆம் ஆண்டு மிஸ் ஃபெமினா ஹரியானாவில் வெற்றியாளராகவும் பின் அதே ஆண்டின் மிஸ் இந்திய அழகி போட்டியிலும், சர்வதேச அழகி போட்டிகளிலும் பங்கு பெற்று இரண்டாவது இடத்தை பெற்றவர் இப்படிப்பட்ட மீனாட்சி சௌந்தரி தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் நடித்து அறிமுகமானார்.

kavya dapar
kavya dapar

காவியா தாபர் : மாடல் அழகியாக வலம் வந்த இவர் தெலுங்கு படங்களில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தவர். விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

ashima narwal
ashima narwal

ஆஷிமா நர்வால் : மாடலிங் மற்றும் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் படத்தில் நடித்து அறிமுகமானார். படம் வெளிவந்து சுமாராக ஓடியது.

ஷில்பா மஞ்சுநாத்  : தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் இவர் விஜய் ஆண்டனியின் சைத்தான் காலி போன்ற படங்களில் நடித்து கைதட்டல் வாங்கியவர். கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா ராஜ்  : மாடல் அழகியான இவர் கன்னட திரை உலகில் முதலில் அறிமுகமானார் அதன் பிறகு தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் 2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தில் அறிமுகமானார்.