vijay antony daughter Meera : நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் திடீரென அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சினிமா பிரபலங்கள் இடையே மட்டுமல்லாமல் ரசிகர்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனியின் மகள் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதனால் தான் இந்த விபரீதம் முடிவை எடுத்தார் என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீராவின் உடலை பார்த்த விஜய் ஆண்டனியின் மனைவி கதறி அழுதார். அதுமட்டுமில்லாமல் பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் மீரா எழுதியுள்ள கடிதம் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது அந்த கடிதத்தில் ‘நான் இல்லாமல் என் குடும்பம்’ ‘குடும்பம் இல்லாமல் நானும் தவித்துப் போவேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது ஆங்கிலத்தில் அந்த கடிதத்தில் “லவ் யூ ஆல்” “மிஸ் யூ ஆல்” என தொடங்கப்பட்டுள்ளது.
மீரா தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள் இதற்கிடையில் இப்படி சிறு வயதிலேயே அவர் இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்ததால் திரை உலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கமான twitter பக்கத்திலும் ஆறுதல் கூறி வந்தார்கள். இந்த நிலையில் விஜயின் தாயார் ஷோபா அவரது வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.