Vijay Antony: நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று திரையரங்கங்களில் வெளியாக இருப்பதனால் அதற்கான பிரமோஷன் பணிகளில் படக் குழுவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் இது விஜய் ஆண்டினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரை உலகினர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் ஆண்டனியின் மகள் மீரா இருந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் அதற்குள் பட புரமோஷனுக்கு வந்து விட்டாரே என பலரும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
எனவே எதற்கு பிரஸ் மீட்டில் விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இசையமைப்பாளர், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் திடீரென தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மீரா சமீப காலங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் இதனால் திடீரென இவ்வாறு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இந்த சூழலில் மகள் இறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் அதற்குள் விஜய் ஆண்டனி சினிமா பட ப்ரோமோஷன்க்கு வந்து விட்டாரே என சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் சி. எஸ் அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் விஜய் அண்ணனின் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
எனவே இந்த ப்ரோமோஷனில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் முதன்முறையாக கலந்துக் கொண்டார். சி.எஸ் அமுதனின் தந்தை தான் இசையே தெரியாத எனக்கு இசைக்கற்று கொடுத்த குரு என்றும் மியூசிக் எனக்கு இலவசமாக எளிமையாக கற்றுக் கொடுத்தார். இந்த நன்றி கடனை நான் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என மனவேதனைகளுடன் ரத்தம் பிரஸ்மீட்டில் விஜய் ஆண்டனி பேசினார்.