Vijay Antony: விஜய் ஆண்டனி ரத்தம் படத்தின் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்நிகழ்ச்சிக்கு இளைய மகள் லாராவையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இவ்வாறு திடீரென எதற்காக விஜய் ஆண்டனி முதல் முறையாக தனது இளைய மகள் லாராவை ப்ரோமோஷன் பணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடன் அழைத்து வந்தார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் படம் உருவாகி இருக்கும் நிலையில் விஜய் ஆண்டனி உடன் நந்திதா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரத்தம் படத்தினை தமிழ்படம், தமிழ்படம் 2 போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் படப்பிடிப்புகள் முடிந்து ப்ரோமோஷன் பணிகளில் படக் குழுவினர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் வருகின்ற 19ஆம் தேதி அன்று ரத்தம் படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சம்பவம் விஜய் ஆண்டனி குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினார்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு தனது மகள் இறந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் விஜய் ஆண்டனி சினிமா பட ப்ரோமோஷன்களில் பங்கு பெற்று வருகிறார். அப்படி சமீபத்தில் நடைபெற்ற ரத்தம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவையும் அழைத்து வந்தார்.
இவ்வாறு விஜய் ஆண்டனி முதல் முறையாக தனது மகளை ப்ரோமோஷன் பணிக்கு அழைத்து வந்ததற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மீரா இறந்ததற்குப் பிறகு லாரா வீட்டிலேயே இருந்து வருவதனால் மீரா ஞாபகமாகவே இருக்கிறாராம். எனவே தனிமையில் விடக்கூடாது என்பதற்காகவும், மன உளைச்சல் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் ரிலாக்ஸாக இருப்பதற்காக இவ்வாறு விஜய் ஆண்டனி லாராவை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.