விஜய் அண்ணா தான் எங்கள் குடும்பத்தின் அடையாளமே.. சர்வைவர் நிகழ்ச்சியில் உணர்ச்சி போங்க பேசிய விக்ராந்த்.

vijay-and-kvikranth

மக்களை கவர்ந்த பிரபலங்களை பற்றி அவரது குடும்பத்தினர் அல்லது அவருடன் நெருங்கி இருக்கும் நண்பர்கள் தான் பெரிதாக சொல்வார்கள் அப்படி தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் நடிகர் விக்ராந்த்.

இவரது அண்ணன் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது விஜயை பற்றி அவரது சித்தி பையன் விக்ராந்த் சர்வைவர் நிகழ்ச்சியில் அவ்வப்போது அவரைப் பற்றி பேசுவது வழக்கம் ஏன் அண்மையில் கூட இவர் ஒரு சமயத்தில் எங்கள் வீட்டில் சுத்தமாக காசே இல்லை வாடகை வீட்டில் இருந்தோம் அப்பொழுது காசு இல்லாததால் ரொம்ப ஆவதி பட்டோம்.

இதை உணர்ந்து கொண்ட எங்கள் அண்ணன் விஜய் முதலில் ஒரு வீடு எங்களுக்கு கட்டிக் கொடுத்து அதில் இருக்க சொன்னார். இப்போ இருக்கிற  காலகட்டத்தில் சொந்த அண்ணன் கூட இது போல செய்ய மாட்டார்கள். சித்தி குடும்பத்திற்காக இப்படி செய்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தைத் கொடுத்ததாக பேசினார் இப்பொழுது விஜயை பற்றி அவர் இன்னும் அதிகமாக பேசி உளளார் அதில் அவர் கூறியது.

என் அண்ணன் விஜய் ஆரம்ப கட்ட நாட்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தார் அப்போது பத்திரிகையாளர்கள் எல்லாம் இவரைப் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சி இவர் நடிக்கிற  படத்தை  தியேட்டர்ல போய் பார்க்கணும் பார்க்கணும்மா என கூறி கிண்டலடித்த ஒரு காலம் உண்டு ஆனால் அதை அப்பொழுது மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் விஜயின் வாழ்க்கை அப்படியே மாறிப் போனது.

மேலும் அப்போது விஜய்யை ஒரு மாதிரியாக பேசியவர்கள் பின் அவரை புகழ்ந்து பேசிய காலம் உருவானது விஜய் தனது வீட்டில் இந்த இரண்டு பக்கங்களையும் பிரேம் செய்து வைத்துள்ளாராம். தன்னை விமர்சித்தவர்களை மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளார் தளபதி விஜய் விஜய் தன்னுடைய தன்னம்பிக்கையால் இவ்வளவு இடத்தை பிடித்துள்ளார் என அவர் கூறினார் மேலும் எங்கள் குடும்பத்தின் அடையாளமே விஜய் அண்ணா தான் ஐ லவ் யூ விஜய் அண்ணா என கூறி பேசியிருந்தார் விக்ராந்த்.