vishal after ajith : தமிழ்சினிமாவில் தற்பொழுது முன்னணி நடிகர்களில் இருப்பவர் தல அஜித் மற்றும் விஜய் இவர்களின் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது அந்த அளவு இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அதேபோல் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவு கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.
அதேபோல் அஜித் விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் சமூகவலைதளத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் விஜய்க்கு அடுத்து விஷால் என பிரபல பத்திரிக்கையாளர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்று அஜித் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் பல திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் மற்ற மொழி டிவி சேனல் இருக்கும் டப்பிங் செய்யப்பட்ட வெளியாகி வருகின்றது, அந்தவகையில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக படங்கள் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதன் பிறகு விஜய்க்கு அடுத்தது என்று பார்க்கப்போனால் விஷால்தான் லிஸ்டில் இருக்கிறாராம்.
விஜய் ரஜினி படங்கள் எந்த அளவு டப்பிங் ரைட்ஸ் வைக்கப்படுகிறது அந்த அளவு விஷாலின் படங்களை அதைவிட கம்மி விலைக்கு வாங்கிக் கொள்கிறார்களம், அதுமட்டுமில்லாமல் இன்னும் சொல்லப்போனால் தல அஜித்தின் ஹிந்தி டப்பிங் படங்களுக்கு கூட விஷாலின் படத்தின் விலையை விட குறைவாக தான் கொடுக்கிறார்களாம், இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் அஜித்தின் திரைப்படத்திற்கு மாபெரும் வசூல் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஹிந்தி டப்பிங் டிவி ரைட்ஸ் போன்றவற்றில் விஷாலிடம் அஜித் தோற்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதனால் வலிமை திரைப் படத்தை இந்தியில் நேரடியாக வெளியிட வேண்டும் என ரசிகர்கள் பலத்த கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதனை பழைய திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஏற்பாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.