இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் மௌனம் பேசியதே. இந்த திரைப்படம் வெளியாகி இருபது வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் அமைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சூர்யா நடித்துள்ள மௌனம் பேசியதே படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக கூறி ஒரு புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ஒரு ரொமாண்டிக் திரைப்படம் மௌனம் பேசியதே.
இந்த திரைப்படத்திற்கு இவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் கதை, வசனம், இசை, எல்லாமே ஹிட் அடிக்க படமும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த சமயத்தில் நடிகர் விஜய், விக்ரம், சூர்யா ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் சூர்யாவின் மௌனம் பேசியதே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை வாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதாவது மௌனம் பேசியதே படத்தின் பூஜை போடப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் மௌனம் பேசியதே திரைப்படத்தின் பூஜையில் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இந்த புகைப்படத்தை தான் தற்போது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் மௌனம் பேசியதே வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையும் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.