14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

vijay
vijay

தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது சொந்த உழைப்பால் சினிமாவில் சாதித்து காட்டினார். அந்த வகையில் தற்போது வரையிலும் விஜயின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் விஜயன் பேனாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பிரபல நடிகை திரிஷாவுடன் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து இருபது ஆண்டு காலங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை திரிஷா. இடைவெளியில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 90ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார்.

அந்த வகையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கத. இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் என்று கூறி வந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து கேரள மன திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் இவர் தனது இளமையான பருவத்தில் விஜயுடன் இணைந்து முதல் முறையாக கில்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு திருப்பாச்சி,ஆதி, குருவி ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

கடைசியாக இரண்டு திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இவ்வாறு மற்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்,திரிஷா ஜோடி மீண்டும் இணைந்து நடித்த போவதாக தகவல் வைரலாகி வருகிறது.

இவர்கள் இணைய உள்ள இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் விஜயின் 67ஆவது படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதற்காக கதாபாத்திரத்திற்கு அவர்கள் மிகவும் பொருத்தமாக இருப்பார் என தேர்வு செய்தார்களாம். மேலும் தற்பொழுது திரிஷாவுக்கு 40 வயதை நெருங்கி உள்ள நிலையில் ஆனால் 20 வயது பெண் போல் மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.