தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் பல படங்களில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாக நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்களை வைத்திருப்பவர்.
பின்பு வடிவேலு இந்திரலோகத்தில் நான் அழகப்பன், இருபத்தி மூன்றாம் புலிகேசி, எலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் வடிவேலுவுக்கு சினிமாவில் ரெக்கார்டு கொடுக்கப்பட்டு படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடித்து வருகிறார் இந்த படத்தில் வடிவேலுடன் பல முக்கிய நடிகர் நடிகைகளும் இணைந்துள்ளனர்.
குறிப்பாக சின்னத்திரை நாயகி மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இந்த படத்தில் வடிவேலுடன் இணைந்து ஜோடியாக நடித்து வருகிறார். பெரும்பாலும் படங்களில் நான்கைந்து பாடலுக்கு குறைச்சல் இல்லாமல் இடம்பெறும் ஆனால் தற்போது வரும் பல படங்களில் நேரம் காரணமாக அதிகம் பாடல்கள் இடம் பெறவில்லை அப்படியும் பாடலுகானா சூட்டிங் எடுக்கப்பட்டதால் அந்த பாடலை படத்தின் இறுதியில் போட்டு விடுகின்றன.
அப்படி சமீபத்தில் வந்த விஜய்யின் பீஸ்ட் படம், சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் போன்றவற்றில் கூட நாம் அதை பார்த்து இருப்போம். இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு ஷிவானி உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆனால் அந்த படத்தின் நேரம் காரணமாக அந்த பாடல் படத்தின் முடிவில்தான் ஒளிபரப்பாகும் என தகவல் வெளிவந்துள்ளது.