விஜய்யின் கடைசி படம் சும்மா தெறிக்க போகுது.. ஹெச் வினோத் கூட்டணியின் தளபதி 69 மாஸ் அப்டேட்

vijay-h vinoth
vijay-h vinoth

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கோட் வசூலில் கெத்து காட்டி வருகிறது. அதே போல் அவருடைய கடைசி படமான தளபதி 69 பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் தவமிருந்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பாகவே படம் பற்றிய சில அப்டேட் சோசியல் மீடியாவில் கசிந்து வருகிறது. அதாவது எச்பினோத் விஜயின் கடைசி படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

அதன்படி தற்போது மூன்று ஹீரோயின்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறுகின்றனர். இதில் விஜய்க்கு சரியான ஜோடியாக வளம் வந்த சிம்ரன் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு இணைய இருக்கிறார்.

அதேபோல் சமந்தா, மமிதா பைஜூ ஆகியோரும் இப்படத்தில் இருக்கிறார்களாம். இது தவிர ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மோகன்லால் மீண்டும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆனால் இந்த முறை அவருடைய கேரக்டர் யாரும் எதிர்பார்க்காததாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கிட்டத்த்ட தியாக ிலையில் இருக்கிறதாம்.

இப்படி அனத்து வேலைகளும் பரபரப்பாக இருக்கும் நிலையில் இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்களமாக இருக்கும். அத்துடன் சேர்த்து சிறு சிறு அரசியல் வசனங்களையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஆக மொத்தம் தளபதி 69 விஜய்க்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.