கதையை எழுதி வைத்துக்கொண்டு ஏழு வருடமாக விஜய்க்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்.! இறங்கி வருவாரா தளபதி.!

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.விஜய் திரைப்படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு 7 வருடமாக காத்துக்கொண்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.  இந்த திரைப்படத்துக்கான ரிலீஸ் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் புரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு ப்ரோமோ வீடியோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகி அனைத்து புரோமோ விடியோகளும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகிறது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகும்வரை எந்த ஒரு தடையும் வரக்கூடாது என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும் தளபதி விஜயுடன் ஏழு வருடங்களாக இணைந்து பணியாற்ற முடியாமல் கௌதம் மேனன் தடுமாறி வருகிறார்.

இவர் 2013ம் ஆண்டு விஜயுடன் யோகன் அத்தியாயம் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்தார் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் திரைப் படக் கதையாக அமைந்தது. ஆனால் இந்த திரைப்படம் ஆரம்ப கட்டத்தை விட்டு நகரவே இல்லை. இந்த திரைப்படத்துக்கான போட்டோ ஷூட் கூட  நடைபெற்றது.

அதன் பிறகு இந்த திரைப்படம் எடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது அதன் பிறகு கௌதம் மேனன் அஜித் விக்ரம் தனுஷ் சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கியுள்ளார் ஆனால் இவர் இன்னும் விஜயை வைத்து பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

சமீபத்தில் கட கௌதம் மேனன் ஒரு பேட்டியில் தளபதியுடன் படம் செய்வேன் அதற்காக வெயிட் செய்கிறேன் என கூறியிருந்தார். அப்படி இவர்கள் இருவரும் இணைந்தால் அந்த திரைப்படம் மிரட்டல் கதையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

gautham menon
gautham menon