சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய விடா முயற்சியால் விஸ்வரூபம் எடுத்து வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் வெள்ளித்திரையில் கிடு கிடு என உயர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மிகப் பெரிய வெற்றியை நிலைநாட்டியது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் பிரின்ஸ் இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்றது இந்த படத்திற்கு தெலுங்கு இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பெரும் அளவில் வெற்றி பெறவில்லை இதனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் குடும்ப பங்கான திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
அதேபோல் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது இந்த நிலையில் தற்பொழுது தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதேபோல் வெங்கி அட்லூரி தெலுங்கு இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்ததால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வம்சி திரைப்படத்தையும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தையும் தெலுங்கு இயக்குனர் தான் இயக்கி வருவதால் சிவகார்த்திகேயன் நிலைமைக்கு விஜய் மற்றும் தனுஷ் தள்ளப்படுவார்கள் என்ற பதற்றம் இரு தரப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் அவரவர்களுக்கு பிடித்த ஹீரோ என்பதால் இருதரப்பு ரசிகர்களும் அவர்களின் ஹீரோவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். எது என்ன என்பதை படம் வெளியானால்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.