தளபதி விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்திற்கு செல்ல அவரின் கடின உழைப்பு தான் என்று கூறலாம் ஆனால் ஒரு காலகட்டத்தில் விஜய்யை தூக்கி விட்டவர்களில் அவருடைய அப்பாவான எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
தளபதி விஜய் சினிமா கேரியரில் துப்பாக்கி படம் வரையில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் என்றால் அது அவரின் தந்தை தான். விஜயை எப்படியாவது ஹீரோவாக உருவாக்க வேண்டும் என நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என ஆரம்ப கட்டத்தில் பல திரைப் படங்களை எடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர்.
பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்த பிறகுதான் விஜய் வெளி தயாரிப்பு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வெளி தயாரிப்பில் நடித்தாலும் விஜய்க்கு எந்த மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும் கதை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது சரியாக தெரியவில்லை. அதனால் விஜய்க்கு எந்த மாதிரியான கதை அமைய வேண்டும் என்பதை எஸ் ஏ சந்திரசேகர் தான் முடிவு செய்வாராம்.
சொல்லப்போனால் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய துப்பாக்கி திரைப்படத்தின் கதையை` எஸ் எஸ் சந்திரசேகர் தான் முடிவு செய்து விஜய்யை நடிக்க வைத்தாராம். ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்து அதை கேட்டுவிட்டு நடிக்கவைத்து மிகப் பிரம்மாண்ட வெற்றி கொடுத்தவர்.
ஆனால் சமீபகாலமாக விஜய் தானாகவே கதையை தேர்வு செய்து நடித்து வருகிறாராம். இது தொடர்பாக அப்பா மற்றும் மகனுக்கு இடையே பலத்த தகராறுகள் பஞ்சாயத்துக்கள் நடைபெற்றுள்ளது. இப்படி இருக்க தன்னுடைய மகன் விஜய்க்கு எஸ் ஏ சந்திரசேகரன் முதலமைச்சர் ஆசையை காட்டி விஜயை ஒரு வழி செய்து விட்டார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட எஸ் ஏ சந்திரசேகர் ஆரம்பிக்கும் கட்சிக்கு தன்னுடைய ரசிகர்கள்யாரும் ஆதரவு கொடுக்க கூடாது என வெளிப்படையாக அறிக்கையைை வெளியிட்டார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படியிருக்கையில் சமீபகாலமாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடையே சண்டை முற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் அவர்களை வீட்டு பக்கமே சேர்ப்பது இல்லை எனவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய்யை பார்த்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாகவும் அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் தன்னை சந்திப்பதை நிராகரித்து வருவதாக கூறியிருந்தார்.
விஜய் என்ன தான் சினிமாவில் இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்து விட்டாலும் அவர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது சந்திரசேகர் என்பதை மறந்து விட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் விஜய் இப்படி மாறியதற்கு அவரை சுற்றி உள்ள கூட்டங்கள் தான் காரணம் எனவும் அந்த கூட்டத்திலிருந்து விஜய் வெளியே வந்து விடனும் எனவும் கூறியிருந்தார். தன்னுடைய மகனை எப்படியாவது தன்னுடன் பேச வைக்க வேண்டுமென சந்திரசேகரன் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறாராம்.