தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் ரஜினி, கமலுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் தான் அந்த அளவிற்கு தற்போது முன்னேறி உள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் மோதிக்கொண்டனர் அதன் பிறகு 2023 வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மூலம் இருவரும் மோத உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை அடுத்து நடிகர் விஜயும் அஜித்தும் எந்தெந்த திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்டார்கள் எந்த படம் வெற்றி அடைந்தது என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
கோயம்புத்தூர் மாப்பிள்ளை, வான்மதி இந்த ரெண்டு திரைப்படங்களும் 1996 ஜனவரி 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனதாக கூறப்படுகிறது. அதே வருடத்தில் அடுத்த மாதமே இவர்கள் இருவரும் மறுபடியும் மோதிக்கொண்டனர். விஜய்க்கு பூவே உனக்காக அஜித்திற்கு கல்லூரி வாசல் இந்த இரண்டு படமுமே பிப்ரவரி 18 தேதி 1996 ல் ரிலீஸ் ஆனது. தளபதி விஜயின் பூவே உனக்காக திரைப்படம் பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.
அடுத்த மோதல் டிசம்பர் மாதம் 1997 ஆம் ஆண்டு அஜித்தின் ரெட்டை ஜடை வயசு விஜய்க்கு காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் விஜயின் படமான காதலுக்கு மரியாதை திரைப்படம் டிசம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது அஜித்தின் ரெட்டை ஜடை வயசு திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. கொஞ்சம் முன்னுக்கு பின் ரிலீஸ் ஆனாலும் காதலுக்கு மரியாதை மிகப் பெரிய ஓப்பனிங்காக விஜய் அவர்களுக்கு அமைந்தது.
அதன் பிறகு நிலாவே வா விஜய் திரைப்படமும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் அஜித் திரைப்படமும் கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒன்றாகவே வெளியானது. ஏனென்றால் 1998 ஆம் ஆண்டு விஜயின் நில்லாவே வா படம் ஆகஸ்ட் 14ம் தேதியும் அஜித் அவர்களுடைய படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் அஜித் விஜய் படங்கள் இரண்டுமே நன்றாக ஓடியது. அது மட்டுமல்லாமல் இந்த மோதலில் அஜித் திரைப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக ஜனவரி 29ஆம் தேதி 1999இல் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியானது அதேபோல அஜித் அவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி 1999இல் உன்னைத் தேடி என்ற படம் வெளியானது. இதில் விஜயின் துள்ளாத மனமும் துள்ளும் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் கேரளாவில் பயங்கரமான அளவில் கொண்டாடப்பட்டது.
அதன் பிறகு விஜய் அஜித் ஒன்றாக சேர்ந்து ஒரே தேதியில் வெளியிட்ட திரைப்படம் என்னவென்றால் 2000 ஆண்டு மே 19ஆம் தேதி விஜயின் குஷியின் அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் என்ற படங்களும் ரிலீஸ் ஆனது.
அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அதுவும் பொங்கலை முன்னிட்டு ரிலீசான படம் தான் விஜயின் பிரண்ட்ஸ் திரைப்படமும் அஜித் அவர்களுக்கு தீனா திரைப்படம் வெளியானது. இதில் அஜித்தின் தீனா திரைப்படம் பயங்கரமான வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. அது மட்டுமில்லாமல் அஜித்தை ஒரு மாசான ஹீரோவாக இந்த படம் அறிமுகப்படுத்தியது. ஆனால் விஜய்யின் ஃபிரண்ட்ஸ் படம் தோல்வியடையவில்லை குடும்பங்கள் கொண்டாட கூடிய ஒரு படமாக வெற்றி பெற்றது.
அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அஜித் அவர்களுக்கு வில்லன் விஜய் அவர்களுக்கு பகவதி படம் வெளியானது. அதன் பின்னர் 2003 அக்டோபர் 24 ஆம் தேதி அஜித் அவர்களுக்கு ஆஞ்சநேயா திரைப்படம் ரிலீஸ் ஆனது விஜய் அவர்களுக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோவா எல்லாரும் அங்கீகரிக்க கூடிய வகையில் உருவாகிய படம் தான் திருமலை முழுக்க முழுக்க பிளாக்பஸ்டர் மசாலா தான் விஜய் அவர்கள் களமிறங்கிய திரைப்படமே இதுதான்.
திரும்பவும் பொங்கலை முன்னிட்டு மோதிக்கொண்ட இவர்கள் இரண்டு பேருமே 2006 ஜனவரி 15, 14 என முன்ன பின்ன ரெண்டு பேருமே மோதிக்கொண்ட திரைப்படம் அஜித் அவர்களுக்கு பரமசிவம் விஜய் அவர்களுக்கு ஆதி படமும் வெளியானது. அதன் பின்னர் 2007 ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் தான் விஜய் அவர்களுக்கு போக்கிரியும் அஜித் அவர்களுக்கு ஆழ்வாரும்.
அதன் பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு ஜனவரி 9 மற்றும் ஜனவரி 10ஆம் தேதி விஜய் மற்றும் அஜித் உடைய படங்கள் ஒன்றாக வெளியானது அந்த படம் தான் விஜய்க்கு ஜில்லாவும் அஜித்திற்கு வீரமும். இந்த ரெண்டு படமுமே ஓரளவுக்கு ஓகேவா டீசண்டாக ஓடியது. சில இடங்களில் அஜித் உடைய படம் செம மாஸ் ஆகவும் ஒரு சில இடங்களில் விஜய் அவர்களின் படம் ஓரளவு கிளாஸ்சாகவும் ஓடியது.
இவ்ளோ பெரிய கேப்புக்கு பிறகு வரக்கூடிய பொங்கலில் துணிவு பொங்கல் வாரிசு பொங்கல் என தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாசான ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது.