மாஸ்டர் படத்திற்குப் பிறகு ஜெட் வேகத்தில் சம்பளத்தை ஒரேடியாக உயர்த்திய தளபதி.! அப்போ சூப்பர் ஸ்டார் ரஜினி…

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவர் தற்பொழுது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றன.

அதேபோல் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் ஒட்டடை, தூசு அடைந்த திரையரங்கை மீண்டும் புத்துயிர் கொடுத்தது என்றே கூறலாம். ஏனென்றால் மாஸ்டர் திரைப்படம் வெளியான சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.

அதனால் 50 சதவீத திரையரங்க இருக்கைகள் மட்டுமே அனுமதி தந்தார்கள் இந்த நிலையில் 50% இருக்கைகள் கொடுத்தாலும் அதிலும் சாதனை படைப்போம் என விஜய் ரசிகர்கள் நிரூபித்து விட்டார்கள். அப்படிதான் மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்தது.

இளையதளபதி விஜய் அடுத்ததாக தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது அதேபோல் படத்தை நெல்சன் திலீப்குமார் தான் இயக்க இருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் ஒரேடியாக உயர்ந்துள்ளதால் விஜய்யின்  சம்பளமும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

அதற்கு காரணம் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது தான்.  இந்த நிலையில் விஜய் பிகில் திரைப்படத்தில் 50 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார் அதன்பிறகு மாஸ்டர் திரைப்படத்திற்காக 80 கோடி வரை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

master
master

இதெல்லாம் ஒருபுறமிருக்க அடுத்தது தளபதி 65 திரைப்படத்திற்காக நூறு கோடி ரூபாய் சம்பளமாக பெற இருக்கிறாராம் இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் ஜெட் வேகத்தில் விஜய் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவது தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி அதிரடியாக தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது ஏனென்றால் கடைசியாக நடித்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லாததால்தான் இந்த நிலைமை எனவும் கூறப்படுகிறது. அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 100 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது அதிலிருந்து சில கோடிகளை குறைத்து விட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்புகள் காலதாமதம் ஆவதால் இந்த அதிரடியான சம்பள குறைப்பு இருக்கிறது என கோலிவுட் வட்டாரத்தில் விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.