பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால் அஜித் யுக்தியை கையிலெடுத்த விஜய்.

ajith-vijay-
ajith-vijay-

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் என்றால் அஜித் விஜய் தான். இதனால் இவர்களது படம் வெளிவருகிறது என்றால் இவர்களின் ரசிகர்கள் திருவிழா போல் தான் கொண்டாடுவார்கள். அப்படி அஜித் நடிப்பில் கடைசியாக வந்த வலிமை திரைப்படம் கூட அஜித் ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்றனர் அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலையும் வாரி குவித்தது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று எதிர்பாராத அளவு வசூலை வாரி குவித்த நிலையில் நெல்சன் உடன் விஜய் இணைந்து நடித்து வந்த பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் இருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் ஆகியதையடுத்து படத்தின் கதை மக்கள் மத்தியில் நின்று பேசும் என எதிர்பார்த்த நிலையில் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனத்தையே பெற்று வருகின்றன. இதனால் பீஸ்ட் படக்குழுவினர் பலரும் சோகத்தில் உள்ளனர். இதனிடையில் வி

ஜய் நெல்சனுக்கு கால் செய்து விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் நாம் மீண்டும் இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை மக்களுக்கு கொடுப்போம் என கூறியுள்ளாராம். இதே போல் தான் நடிகர் அஜித்தும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதை கூட்டணியுடன் மீண்டும் இணைந்து ஒரு ஹிட் படத்தைக் கொடுப்பார்.

அப்படி அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் எடுத்த விவேகம் படத்தின் தோல்வியை அடுத்து மீண்டும் அதே கூட்டணியுடன் இணைந்து விசுவாசம் என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார். தற்போது விஜயும் அதே போல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது