சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய அழைக்கும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரையும் பல நடிகைகள் தற்போது வெளிப்படையாக கூறி அந்த வகையில் விஜய் பட நடிகை ஒருவர் இதுபோல் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் படவாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். சமீபத்தில் கூட சின்மயி மீடூ என்ற ஹேஸ் டேக்கில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிலிருந்து பல நடிகைகள் தனக்கு நடந்த அசம்பாவிதத்தை அதில் பதிவிட்டு வந்தார்கள்.
இதில் பெரிய பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் என பலரும் சிக்கினார்கள். அந்த வகையில் தற்பொழுது நடிகை இஷா கோபிகர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகிய என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஷா கோபிகர்.
அதன் பிறகு விஜய் நடித்த நெஞ்சினிலே விஜயகாந்த் நடித்த நரசிம்மா ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் தற்பொழுது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் என்ற திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம், மராத்தி ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இஷா கோபிகர் பட வாய்ப்புக்காக பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் ஒன்றைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அவர் அளித்துள்ள பேட்டியில் என்னை ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக அந்தப் படத்தின் கதாநாயகன் தனியாக வரும்படி அழைத்தார்.
இதனை பிரபல தயாரிப்பாளர் கதாநாயகனுக்கு உங்களை பிடித்துள்ளது அதனால் அவரை தனியாக சென்று சந்திக்குமாறு கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் உடன் உதவியாளர் யாரும் இல்லாமல் தனியாக சென்று அவரை சந்திக்க வேண்டும் எனவும் அந்த தயாரிப்பாளர் கூறியுள்ளார். அந்த நடிகரின் நோக்கம் எனக்கு புரிந்து விட்டது நான் என்னுடைய அழகையும் திறமையை வைத்துக்கொண்டு தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.
அதனை அடமானம் வைத்து விட்டு நடிகருடன் செல்லவேண்டிய நிலைமை எனக்கு கிடையாது என கோபத்துடன் கூறினார் அதனால் அந்த திரைப்படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் மேலும் எனக்கு கிடைக்க இருந்த பல பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டடேன் என்று பரபரப்பு குற்றச்சாட்டை ஈஷா கோபிகர் வைத்துள்ளார்.