விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலம் 2002ஆம் ஆண்டு சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இவர் என்னதான் தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பாலிவுட்டில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் 2000ஆம் ஆண்டு உலக அழகி விருதைப் பெற்றார்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு சிங்கர் நிக் ஜோனஸ்சை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா சோப்ராவுவை விட நிக் ஜோனஸ் பத்து வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கென்று மும்பையிலும் சொகுசு வீடுகள் வைத்துள்ளார்.
அதில் ஒரு சொகுசு வீட்டை 7 கோடிக்கு கவர்ச்சி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.