விஜய் ரசிகர்களின் செயலால் நெகிழ்ச்சியான மக்கள் மற்றும் பிரபலம்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உலகிலுள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் தான்.

ஏனென்றால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அமைந்துள்ளது. எனவே எந்த திரைப்படமாக இருந்தாலும் அத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும்.

அந்தவகையில் இவர் இறுதியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  ஜார்ஜியாவில்  முடிந்து தற்போது சென்னைக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் விஜய்யின் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

அதாவது விவேக் மறைந்ததும் அவருடைய கனவான ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவோம் என்று உறுதி எடுத்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் ஒன்று கொரோனா.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மிகவும் கட்டுப்பாடாக இருப்பது ஆக்சிஜன்.  எனவே தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை வழங்கி உள்ளார்கள்.

vijay makkal iyakkam
vijay makkal iyakkam