தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், தளபதிவிஜய் ஆரம்பகாலத்தில் பல தடைகளையும் அவமானங்களையும் கடந்து வந்தவர்.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சில சோதனைகளை கடந்து தான் சாதனையை அடைய முடியும் அந்த வகையில் தளபதி விஜய்க்கு 2005ல் இருந்து 2010 வரை சோதனை காலம் என்றே கூறலாம், அந்த அளவு விஜய் நெருக்கடியை சந்தித்தார், கிட்டத்தட்ட படத்தில் நடிப்பதையே விட்டு விடலாம் என்ற அளவிற்கு ஏற்படுத்திய காலம்.
விஜயை பல ரசிகர்கள் விட்டுச் சென்றதற்கு காரணம் தொடர் தோல்வி திரைப்படங்கள்தான், விஜய் தொடர்ந்து காதல் திரைப்படங்கள் ஆகவே நடித்து வெற்றி கண்டு வந்ததால் அதன் பின்பு விஜய்க்கு ஆக்ஷன் செட்டாகுமா என்பதை சோதனை செய்த திரைப்படம்தான் பகவதி, இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி இல்லையென்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிதான்.
இதனைத் தொடர்ந்து தளபதிவிஜய் ராமண்ணா இயக்கத்தில் திருமலை திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஒரு பட்டாளத்தையே உருவாக்கி கொடுத்தது என்று கூறலாம், மேலும் இந்த திரைப்படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வெளியில் டிக்கெட் கிடைக்காமல் 90’s கூட்டம் அலைமோதியது.
இந்த திரைப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் இனி ஆக்ஷன் திரைப்படத்திலேயே நடிக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தாராம் தளபதி விஜய், ஆனால் இந்த திரைப்படம் திரையில் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.