இரண்டு முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்த கதையில் நடித்துள்ள விஜய் வெளிவந்த அதிர்ச்சி தகவல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கலவை விமர்சனத்தை பெற்றாடும் கூட வசூல் ரீதியாக எப்பொழுதும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் தற்பொழுது வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.
இந்த படத்தினை தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்க தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். இவரை அடுத்து ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ காந்த், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் கிடையாதாம். அதாவது இயக்குனர் வம்சி முதலில் இந்த படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் தான் கூறினாராம் ஆனால் மகேஷ் பாபு அந்த கதையை கேட்டுவிட்டு பிறகு வேண்டாம் என கூற இவரை அடுத்து ராம்சரனிடம் கதையை கூறியுள்ளார் வம்சி.
அதேபோல் ராம்சரனும் இந்த படத்தின் கதை பிடிக்காத காரணத்தினால் வேண்டாம் என மறுக்வே அதன் பிறகு தான் தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தின் கதையை கேட்டுவிட்டு பிறகு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் வேண்டாம் என்ற கூறிய கதையை நடிகர் விஜய் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் நாளை இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் வாரிசு படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.