ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் நடித்த விஜய்.? படம் வெளிவந்து என்னாச்சு தெரியுமா..

vijay
vijay

தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து தோல்வியை காணாத இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து  லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் காஷ்மீரில் முடிந்ததை அடுத்து மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக படக்குழு சொல்லி உள்ளது. லியோ திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை எடுத்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன்..

விஜய் கதை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது இப்படி திரையுலகில் வெற்றியை மட்டுமே கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் விஜய் இதற்கு முன்பும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் வெங்கடேஷ் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பகவதி.. இந்த படத்தின் மூலம் தான் விஜய் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தில் ஆக்சன், காமெடி அற்புதமான இருந்தால்  மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஓடியது. படத்தில் விஜய் உடன் இணைந்து ரீமாசென், வடிவேலு, இளவரசு, வசந்தி, விஸ்வநாதன், ஜெய் போன்றோர்கள் நடித்துள்ளனர். ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க இருந்தது விஜய் கிடையாதாம்.. பகவதி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம்..

அப்பொழுது இந்த பட வாய்ப்பை நடிகர் ரஜினி தவற விட அதன் பிறகு விஜய் இந்த படத்தில் கமிட்டாகி நடித்தார் என சொல்லப்படுகிறது ரஜினி நடித்திருந்தால் இந்த படம் இன்னும் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் என்பது தான் உண்மை.. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.