ரஜினிக்கு அடுத்து அதிக ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாக்கி உள்ளது. இதில் விஜய் ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க.. மறுபக்கம் விஜய் மற்றும் வாரிசு படம் குறித்து தகவல்கள் வெளியே கசிந்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் தற்போது விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் பகவதி. இந்த படத்தை வெங்கடேஷ் இயக்கியிருந்தார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்னது என்னவென்றால் பகவதி திரைப்படம் முதலில் விஜய் நடிக்க வேண்டிய படமே கிடையாது. நான் ரஜினியை வைத்து தான் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தேன்.. ஆனால் அப்பொழுது அவரை ரீச் பண்ண முடியவில்லை கடைசியாக சரத் சாரை வைத்து படம் பண்ண நினைத்தேன் ஆனால் அதுவும் நடக்கவில்லை.
அந்த சமயத்தில் ஷாஜகான் படத்தின் டிரைலரை பார்த்தேன் அதில் விஜய் நடிப்பு பிரமாதமாக இருந்ததால் அவரை சந்தித்து கதையை சொன்னேன் முதலில் தயங்கினார் கடைசியாக படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் படம் வெளிவந்த பிளக்பஸ்டர் ஹிட் அடித்தது.