சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளை படமாக எடுகின்றனர் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் வித்தியாசமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறி உள்ளன இதனால் லோகேஷின் சினிமா மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது.
இவர் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார் அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக 410 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
அதற்கான வேலைகளில் தான் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகிறது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 5 அல்லது 6 பேர் முக்கிய வில்லன்களாக நடிப்பார்கள் என தெரிய வருகிறது அதேசமயம் இந்த படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பெங்களூருவில் நடிகர் சூர்யாவை திடீரென சந்தித்து.. சில மணி நேரங்கள் பேசி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் தளபதி 67 படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. மறுபக்கம் கைதி 2 படமாக இருக்கலாம்.
அல்லது இரும்பு கை மாயாவி படத்தின் கதையை மீண்டும் தூசி தட்டலாம் எனவும் சொல்லப்படுகிறது இதனால் இவர் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு படத்தில் சூர்யா நடிப்பது உறுதி. அதனால் சூர்யாவை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர் இந்த செய்தி தான் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.