காலத்திற்கு ஏற்றவாறு சிறப்பான கதைகளை இளம் இயக்குனர்கள் கொடுக்க ஆசைப்படுகின்றனர் அந்த காரணத்தினால் தான் டாப் ஹீரோக்களை தொடர்ந்து இளம் இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார்.
இதுவரை மாநகரம், மாஸ்டர், கைதி ஆகிய படங்களை எடுத்து அசத்தினார். இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசனுடன் முதல் முறையாக கைகோர்த்து விக்ரம் எனும் திரைப்படத்தை எடுத்து எடுத்துள்ளார் இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.
இதற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக இருந்து வருகிறார். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் படம் குறித்தும் கமல் குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது விக்ரம் திரைப்படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து.
படத்தை வெளியிடும் வரை தீவிரம் காட்டி விட்டு அதன் பிறகு விஜயுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என அவர் கூறினார். தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் எடுக்க உள்ளார் அதற்கான வேலைகள் வெகு விரைவிலேயே தொடங்குவார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரத்தினம் அவர்கள் தளபதி 67 படம் குறித்து பேசி உள்ளார்.
அவர் சொன்னது : தளபதி 67 படம் எப்படி இருக்கும் என தெரியவில்லை ஆனால் விக்ரம் படத்தை விட மிக சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார். இவர் இவ்வாறு சொன்னது தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மேலும் ரசிகர்களும் இந்த செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.