விஜய் படத்தில் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை.? வேற லெவலில் சம்பவம் பண்ணும் இயக்குனர்.!

thalapathy-
thalapathy-

தளபதி விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தீல் ராஜு தயாரிக்கிறார்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா,குஷ்பூ, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இரண்டு கட்டப்படும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது இதனால் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இது இப்படி இருக்க அடுத்ததாக மீண்டும் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்க இருக்கிறார் விஜய் தளபதி 67 படத்தை ஒரு கேங்ஸ்டர்  படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

தற்பொழுது அதற்கான வேலைகளை பார்த்து வருவதாகவும் ஒரு பக்கம் பேசப்படுகிறது.  அதே சமயம் கதைக்கு ஏற்றபடி நடிகர், நடிகைகளையும் தற்போதைய தட்டி தூக்கி வருவதாக செய்திகள் வெளி வருகின்றன அந்த வகையில் தளபதி 67 ல் மொத்தம் 6 வில்லன்கள் அதில் ஒருவராக மலையாள நடிகர் பிருத்திவிராஜனும் மற்றும் ஒரு சில நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷாவும் நடிக்க உள்ளார் என்ற தகவல் பெரிய அளவில் பேசப்படுகிறது நடிகை திரிஷா இதுவரை விஜயுடன் கைகோர்த்து மூன்று, நான்கு படங்களில் நடித்துள்ளார். நடிகை திரிஷா விஜய் 67 படத்தில நடிப்பது இன்னும்  உறுதிப்படுத்தப்படவில்லை.

trisha
trisha