தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தளபதி விஜய் தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ படத்தை தயாரித்து வருகிறார் தளபதி 66 திரைப்படம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தளபதி 66 படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம் மற்றும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படம் உருவாகி வருகிறது. தளபதி விஜய் இதுவரை நடித்திராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 66 படப்பிடிப்பு தளத்திலிருந்து ஏற்கனவே நடிகர் விஜய் நடந்து வந்த வீடியோ இணையதள பக்கத்தில் கசிந்த நிலையில் மீண்டும் தளபதி 66 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோ ஒன்று கசிந்துள்ளது இதில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியே கசிந்துள்ளது.
ரசிகர்கள் இதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். தளபதி 66 படத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை தவிர்க்க படக்குழு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
Thalaivaaa @Actorvijay 😍❤️🔥#Beast pic.twitter.com/6PYE3POsqe
— × റോബിൻ ⱼD × 🕊 (@PeaceBrwVJ) June 9, 2022