நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் மிகப் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து இருந்தாலும் அடுத்த கட்டமாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது.
இப்படி இருந்திருந்தாலும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படக்குழு. அரபி குத்து பாடலை ரிலீஸ் செய்து இருந்தது.பாடல் மற்றும் நடனம் ஆகியவை அனைத்தும் சிறப்பாக இருந்ததால் யூ ட்யூப்பில் தற்பொழுது ட்ரெண்டிங் ஆகி வந்து கொண்டிருக்கிறது. பீஸ்ட் அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு தளபதி விஜய்யும் முதன் முறையாக தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் வம்சி உடன் கைகோர்த்து இருக்கிறார் இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரிக்க உள்ளார். படம் இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கள அதுக்குள்ளேயே கதை இதுதான் இப்படித்தான்.. நடிகர் விஜய்யின் கதாபாத்திரம் இப்படி இருக்கும் என சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இந்த நிலையில் இன்னொரு தகவலும் நமக்கு கிடைத்துள்ளது அதாவது விஜய் எப்படி தெலுங்கு பக்கம் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. இந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்திசுரேஷ் தெலுங்கு படமொன்றில் நடித்து கொண்டிருக்கும் போது..
நடிகர் விஜயை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகக் தயாரிப்பாளர் தில் ராஜு கூறி உள்ளார் இதனைகேட்ட கீர்திசுரேஷ் உடனடியாக விஜயுடன் இந்த தகவலை கூறி உள்ளார் பின் தில் ராஜுவும் விஜய்யும் பேசவே.. பிறகு இந்த குழுவில் இணைய ஆரம்பித்ததாம். இப்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தற்பொழுது ரெடியாக இருக்கிறது.