விஜய் 66 : படத்தில் இணையப்போகும் பிரமாண்ட தெலுங்கு நடிகர் – அப்போ படம் ஹிட் தான்.

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக மாஸ், ஆக்ஷன் படங்களில் பெரிதும் தேர்ந்தெடுத்த நடிப்பதால் தொடர்ந்து வெற்றியை ருசித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக விஜயின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்ட வசூலை அள்ளுகிறது. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து உள்ளது இதனை தொடர்ந்து டப்பிங் பணிகளை நோக்கிய படக்குழு நகர்ந்துள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, பரெட்டின் கிங்ஸ்லி மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

வெகு விரைவிலேயே படத்தை முடித்துவிட்டு தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்க்க உள்ளார். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரிக்க உள்ளார் இந்த படத்தின் கதை மற்றும் விஜய்யின் கதாபாத்திரம் இது தான் என அவ்வபோது கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப் படத்தில் விஜயுடன் இணைந்து தெலுங்கு நடிகர் நானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எதையும் உறுதிசெய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.