காதலர் தினத்தில் பட்டையை கிளப்பப் போகும் தளபதி விஜய்.! செம சுவாரஸ்யமான தகவல்

vijay
vijay

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடைசியாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் தளபதிவிஜய் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வரும் நிலையில் திரைப்படத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தளபதி அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த தகவல் தொடர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தளபதி இந்த திரைப்படத்தில்  குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் தயாரிப்பாளர் தில் ராஜி தளபதி 66 திரைப்படம் குடும்ப பாங்கான திரைப்படமாக இருக்கும் எனவும் பூவே உனக்காக துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இதுபோன்ற படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் தில் ராஜு. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காதலர் தினத்தில் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.