தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் வேற லெவல் எடுத்து வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது 75% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு மிகத் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை சுற்றி சமீபகாலமாக படப்பிடிப்புகள் எடுத்து வந்தனர். அதுபோல தற்போது கேரளாவில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், செல்வராகவன் மற்றும் மலையாள நடிகருடன் இணைந்து உள்ளனர்.
இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் 66வது திரைப்படம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
விஜயின் 66வது திரைப்படத்தை வம்சி என்பவர் இயக்கி உள்ளார் மிகப்பெரிய பொருட்செலவில் தில் ராஜு என்ற தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி ஏற்கனவே 5 கோடி சம்பளம் கேட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக அவர் பேசிய கிட்டத்தட்ட கமிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆம் இப்போது இவர் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மகேஷ் பாபுவின் மகள் என படக்குழு ஒவ்வொருவராக தற்போது கமிட் செய்து வருகிறது வெகு விரைவிலேயே படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.