தளபதி விஜய் அண்மைகாலமாக ஆக்சன் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியை அள்ளி வருகிறார் அப்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்தார்.
இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு வசூலை ஈட்டியது இந்த நிலையில் விஜய் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்தது தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரித்து வருகிறார். தளபதி 66 படத்தில் விஜயுடன் இணைந்து பல டாப் ஜாம்பவான்கள் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம் மற்றும் பல டாப் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் 66 வது திரைப்படத்தில் எந்த மாதிரியான கெட்டப்பில் நடிக்கிறார்.
என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது தளபதி விஜய் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் அடுத்த படத்திற்கான கெட்டப் என கேட்டு வருகின்றனர்.இதோ நீங்களே பாருங்கள்.
Dashing @Actorvijay ❤️😍 pic.twitter.com/DktIH51Lk5
— #Thalapathy66 (@Vijay66FilmOffI) May 10, 2022