vijay 65th movie leading actress wanted to act with him: இளையதளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 65வது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் விஜயுடன் சேர்ந்து நடித்தால் நிறைய திரைப்படங்களை கைப்பற்றலாம்.
என மூடநம்பிக்கையில் இரண்டு நடிகைகள் விஜய் திரைப்படத்தில் கதாநாயகியாக எப்படியாவது விஜயின் 65வது திரைப்படத்தில் நடித்து விடனும் என்று இரண்டுபேரும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.
அந்த இரண்டு பேரும் வேற யாரும் இல்லையாம் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா தான் என இரண்டு பேரும் விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளிவந்துள்ளது.