தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 65வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் முக்கிய லோக்கேசனுக்காக இயக்குனர் வெளிநாடு சென்றிருந்தார். அங்கு ரஷ்யாவில் சில இடங்களை தேர்வு செய்து இணைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மேலும் திரைப்படத்திற்கு படக்குழு விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க உள்ளது முட்டபொம்மா அழகி பூஜா ஹெக்டே என கூறியதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
மேலும் பூஜா ஹெக்டேவை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இன்னொரு கதாநாயகி தேவைப்படுவதால் இளைஞர்களின் கனவுக் கன்னியான சென்சேஷ்னல் நாயகி ராஷ்மிகா மந்தனா திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய்யின் திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரிய அளவில் சொல்லுமளவிற்கு கதை இல்லை என்பதால் இந்த புகைப்படம் எப்படி இருக்குமோ என தெரியவில்லை.
எது எப்படியோ இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.