தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தவிர்க்கமுடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
இவர் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு காரணம் இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர் நடிப்பில் உருவாகி வரும் ஒவ்வொரு திரைப்படத்தின் ரிலீஸ்சுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்பொழுது இவர் தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு, டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உள்ளிட்ட இன்னும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு குறைந்துள்ளதால் மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அதற்காக சென்னையில் செட் போட்டு அதில் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் இருவரும் இத்திரைப்படத்தை இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் படும் தோல்வியடைந்துள்ளது. அந்தவகையில் தோல்வியடைந்த 10 திரைப்படங்களில் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்.
1. புலி
2.தலைவா
3.சுறா
4.ஆதி
5. உதயா
6. என்றென்றும் காதல்
7. நெஞ்சினிலே
8. நிலவே வா
9.சந்திரலேகா
10.நாளைய தீர்ப்பு