தளபதி விஜய் அண்மைகாலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66- வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜூ தயாரித்திருக்கிறார். வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் ஒரு மிகப்பெரிய பணக்காரராக நடித்துள்ளாராம் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா..
ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது இந்த படத்தை எதிர்த்து அதே தேதியில் அஜித்தின் துணிவு படமும் களம் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜயின் அம்மா ஷோபனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அப்பொழுது தனது மகனும், நடிகருமான விஜய்க்கு போன் செய்து உனக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து இருக்கிறேன்.
ஜோ என செல்லமாக அழைத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் சற்று நிமிடம் ஷாக் ஆகிவிட்டனாம். மேலும் ரசிகர்கள் நம்ம விஜய் அண்ணாவின் மற்றொரு செல்ல பெயர் ஜோவா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் இப்பொழுதும் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.