அழகில் ஜொலிக்கும் விக்னேஷ் சிவனின் தங்கை – இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.!

viknesh sivan
viknesh sivan

இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன்  முதலில் சிம்புவை வைத்து போடா போடி என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார். முதல் படம் அவர் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்காததால் அடுத்தபடியாக நல்ல கூட்டணி அமைக்க வேண்டும் என்பதால் நானும் ரவுடிதான் என்ற படத்தின் கதையை உருவாக்கி பல நடிகர் நடிகைகளுக்கு கதையை கூறியுள்ளார். ஆனால் இவரது படத்தில் நடிக்க பலரும் முன்வராத பட்சத்தில் ஒரு கட்டத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்க கமிட் ஆகினர்.

இவரது நடிப்பில் படமும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்து விக்னேஷ் சிவனுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து தானாசேர்ந்தகூட்டம் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

மேலும் அஜித்தின் 62வது திரைப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் விக்னேஷ் சிவன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றும்போதிலிருந்து இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர்.

அதனையடுத்து ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரம் அருகில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்தில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விக்னேஷ் சிவன் தனது கேரியர் தாண்டி குடும்பத்திலும் தனது தங்கை அம்மா போன்றவர்களை பாசத்துடன் நன்கு பார்த்து வருபவர்.

இதை நயன்தாரா கூட ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் அவரது அம்மா தங்கையிடம் அதிகளவு பாசம் வைத்திருக்கிறார் அதனால் என்னையும் நன்கு பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

viknesh sivan
viknesh sivan