சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களை மிஞ்சும் அளவிற்கு இளம் இயக்குனர்கள் பலரும் சிறப்பான கதைகளை சொல்லி எடுத்த உடனேயே தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித் விஜய் சிம்பு சூர்யா ரஜினி போன்ற நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகின்றனர். அதில் தற்போது இளம் இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.
இவர் தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற ஹிட் படத்தை கொடுத்த பிரபலமானவர். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றியதால் நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு பின்பு காதலாக மாறியது. தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனின் காதலி நயன்தாரா மற்றும் சமந்தா விஜய் சேதுபதி போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இதைத்தொடர்ந்து அஜித் அவரது அடுத்த திரைப்படமான 61வது திரைப்படதை வலிமை திரைப்படத்தை இயக்கிய அதே கூட்டணியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்.
அடுத்து அஜீத்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீரோயினாக விக்னேஷ் சிவனின் காதலி நயன்தாரா நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்ற நிலையில் தற்போது படத்தில் பணி புரிவோரின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள அஜித்திற்கு லைக்கா நிறுவனம் 105 கோடி பேசி லாக் செய்து உள்ளது அதை எடுத்து ஹீரோயின் நயன்தாராவிற்கு 10கோடி மற்றும் அனிருத்திற்கு 5 கோடி என பேச பட்டிருந்த நிலையில் எப்படியும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெறும் என்பதால் இயக்குனரான விக்னேஷ் சிவன் தனக்கு 10 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டு உள்ளாராம்.
மேலும் நயன்தாரா போல் தனக்கும் சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள் அல்லது சமமாக கொடுங்கள் என்பதுபோல் கோரிக்கை வைத்துள்ளாராம். இந்த படத்தில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவன் கடினமாக பணியாற்றி வருகிறார்.