தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது சிம்புவின் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது.
அந்தவகையில் இத் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் 8.24 கோடி வசூலை வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளது இவ்வாறு இந்த திரைப்படம் சிம்புவின் வாழ்நாளில் பல வருடங்களுக்கு பிறகாக ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.
நடிகர் சிம்பு இதற்கு முன்பாக பல்வேறு திரைப்படங்களில் நடிக்க முன்வந்து பிறகு அந்த திரைப்படங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அப்படி பாதியில் நிறுத்தப்பட்ட திரைப்படம் தான் வேட்டை மன்னன் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் துணை இயக்குனராக நடிகர் சிவகார்த்திகேயனும் பணிபுரிந்துள்ளார் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் பிரபலங்கள் என பலருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நெல்சன் திலீப்குமார் உடன் விக்னேஷ் சிவன் மற்றும் அருண் ராஜா காமராஜ் ஆகியோர்கள் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் வேட்டை மன்னன் திரைப்படத்தை பற்றிய அப்டேட்கள் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வருவதை தொடர்ந்து ரசிகர்களும் இந்த திரைப்படம் மறுபடியும் துவங்க வேண்டும் என்று ஆதரவுகளையும் தங்களுடைய ஆசைகளையும் பதிவுகள் மூலமாக வெளிக் காட்டி வருகிறார்கள்.