தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது அவர் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டுள்ளார் நயன்தாரா இவர்கள் இருவரும் அண்மையில் வெளியில் சுற்றித் திரியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களும் மற்றும் சினிமா வட்டாரங்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
நயன்தாரா இதற்கு முன்பு சிம்பு, பிரபுதேவா போன்றவர்களை காதலித்து வந்தாலும் இவர்களது காதலை விட விக்னேஷ் சிவன் காதல் மீது உறுதியாக இருந்து வருகிறார். நயன்தாரா சமீபகாலமாக எங்கு சென்றாலும் தனது காதலான விக்னேஷ் சிவனை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சமீபத்தில் நியூயார்க்கில் தனது பிறந்த நாளையும், கிறிஸ்துமஸ் கொண்டாடதையும் வெளிநாட்டிலேயே கொண்டாடினார் அத்தகைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் அதேபோல சமீபத்தில் விக்னேஷ் சிவனின் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் பிரிந்து விட்டனர் என பல்வேறு வதந்திகள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நேற்றைய அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவர்கள் தனது டிக் டாக் பக்கத்தில் நயன்தாராவின் அரிய சில புகைப்படங்களை பதிவிட்டார்.
மேலும் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா கையில் குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு விக்னேஷ் சிவன் எனது குழந்தையின் வருங்கால தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவை திருமணம் செய்யப் போவதை மறை முகமாக சொல்லி உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.