தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா.
இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல்,அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
மேலும் இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள்.
அவர்கள் காதலித்து வருகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் ரொமாண்டிக் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்.அந்த அளவிற்கு ரொமான்டிக் புகைப்படத்தை சமீப காலமாகவே அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் பிப்ரவரியில் திருமணம் செய்ய அவர்களின் பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளதாக இணையதளத்தில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
மேலும் திருமணம் தேதியை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக சொல்ல வேண்டும் என்பதற்காக ரகசியமாக வைத்துள்ளார்களாம்.ஆனால் இதுபற்றி நயன்தாரா தரப்பில் இருந்தும் விக்னேஸ்சிவன் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகவில்லை.
இவர்கள் திருமணம் குறித்து என்ன தகவல் இணையதளத்தில் வெளியாகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.