முத்த காட்சிகளில் நடிக்க சொன்ன விக்னேஷ் சிவன் – கடுப்பாகி திட்டிய நயன்தாரா.!

nayanthara-
nayanthara-

இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் இருவரும் சேர்ந்து படங்களில் பணியாற்றுவதையும் தாண்டி மற்ற படங்களை தயாரிப்பது ,பிசினஸ் போன்றவற்றில் சேர்ந்து பார்த்து வருகின்றனர்.

மேலும் சினிமா நேரம் போக மீதி நேரங்களில் ஊர் சுற்றுவதும் வழக்கமாக வைத்துள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் அந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட், காமெடி கலந்த படமாக இருப்பதால் ரசிகர்களும், பொது மக்களும் இந்த படத்தை பார்த்து வலம் வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முன்பே எடுக்கப்பட்டிருந்தாலும் கொரோனா தாக்கம் காரணமாக படம் ரிலீஸ் தாமதம் ஆனது மேலும் அப்போது ஒரு சிறப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது அதாவது இந்த படத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா ஆகியோர் இணையும் காட்சியை உருவாக்கப்பட்ட போது ஒரு சீனில் நயன்தாரா விஜய் சேதுபதி கண்ணத்தில் முத்தம் கொடுக்க வேண்டும்.

அதற்காக ரொம்ப க்ளோஸ் அப்பில் நயன்தாராவை வர சொல்லி உள்ளார் விக்னேஷ் சிவன். ஒரு கட்டத்தில் கடுப்பான நயன்தாரா-விக்னேஷ் சிவனை பார்த்து சீ போடா என செல்லமாக கூறியுள்ளார் அப்பொழுது அந்த இடமே நகைச்சுவையாக மாறியதாம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வெகு விரைவிலேயே விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ளப்போகும் இருக்கிறார் அதனால் தற்போது இந்த மாதிரியான காட்சிகளை தவிர்க்க அதிக முயன்று வருகிறார் ஆனால் விக்னேஷ்  அந்த காட்சி எடுக்க முயற்சி செய்தார் ஆனால் அது நயன்தாராவுக்கு   சுத்தமாக பிடிக்கவில்லையாம் பின் விக்னேஷ் சிவனும் உணர்ந்து அந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விட்டாராம்.