தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டு தற்போது வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை எடுத்துள்ளார் இதை தொடர்ந்து தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் களை வைத்து மீண்டும் ஒரு முறை காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் சமீபகாலமாக ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கங்களில் உரையாடியும் வருகிறார். அப்படி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் சினிமாவில் வருவதற்கு காரணம் என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் நான் சினிமாவிற்கு வருவதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என பதிலளித்தார் அதுமட்டுமல்லாமல் பாட்ஷா படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் ஹேப்பி ஜாலி மற்றும் குடும்ப படமாகத்தான் இருக்கும் என தெரிவித்தார்.