தமிழ் சினிமாவில் மிகவும் ட்ரெண்டிங்காக தற்போது உள்ள இளசுகளின் ஃபேவரட் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகை நயன்தாரா, மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய திரைப்படம் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு தொடர்ந்து இவர்கள் அடிக்கடி வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் பொழுது மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 90’s கிட்ஸ்களை வெறுப்பேற்றி வருகிறார்கள்.
இவ்வாறு இவர்கள் ஒன்றாக ஊர் சுற்றி வருவதால் பல திரைப்பிரபலங்கள் இவர்களின் காதல் இன்னும் ஒரு வருடத்திற்குல் முறிந்துவிடும் என்று கூறி வருகிறார்கள்.ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் யார் சொல்வதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தற்பொழுது உள்ள நடிகைகளில் இவர் மட்டும்தான் ஹீரோக்கள் அளவிற்கு சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் திருமணத்திற்குப் பிறகு எங்கு தனது மார்க்கெட் குறைந்து விடுமோ என்று தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவ்வபொழுது ரசிகர் ஒருவர் நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆவலுடன் காத்திருக்கிறேன் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்வதற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு.. அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். கொரோனா செல்வதற்காக காத்திருக்கிறேன், ” என பதிலளித்துள்ளார்.
சமீப காலங்களாக கொரோனாவின் பரவல் உச்சத்தில் இருந்து வந்தது.தற்பொழுது ஒரு சில வாரங்களாக தான் பரவல் குறைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை அடுத்ததாக வரப்போவதாக மருத்துவர்கள் கூறிவுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் எப்பொழுது இவர்களுக்கு திருமணம் நடப்பது.