காதலுக்கு வயதை சொன்ன நயன்தாரா.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்..

Vignesh Shivan - Nayanthara
Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan- Nayanthara: இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022-ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்றே உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்ட காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

சிம்பு வரலட்சுமி இணைந்து நடித்த போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படம் படும் தோல்வியினை சந்திக்க பிறகு மேலும் திரைப்படங்களை இயக்க முடிவு செய்தார். இவருடைய இயக்கத்தில் எந்த பிரபலமும் நடிக்க விரும்பவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நானும் ரவுடிதான் படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு வாய்ப்புகள் தேடி அலைந்தார்.

பாண்டியனை பார்க்க போன சரவணனுக்கு பெரும் அதிர்ச்சி.! அவசரப்பட்டுட்டியே சரவணா..

அப்படி பலரும் நிராகரித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டார் பிறகு தனுஷ் தயாரிக்க நயன்தாரா ஹீரோயின் ஆக நடித்தார் இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலிக்க தொடங்கினர்.

Vignesh Shivan - Nayanthara
Vignesh Shivan – Nayanthara

சில வருடங்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் பிறகு  திருமணம் செய்து கொண்டார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுடைய புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார்கள்.

Vignesh Shivan - Nayanthara
Vignesh Shivan – Nayanthara

விக்னேஷ் சிவன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராமில் நயன்தாராவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ,எங்கள் காதலுக்கு வயது பத்து ஒரு தசாப்தமாக நயன்தாராவுடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரோஜா பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றையும் பரிசாக கொடுத்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.