தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் சோலோ படங்களின் நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அண்மையில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நயன்தாரா கையில் ஜவான், கனெக்ட், கோல்ட் ஆகிய திரைப்படங்களில் கைவசம் வைத்திருக்கிறார் முதலாவதாக “ஜவான்” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ஒரு பக்கம் படங்களின் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பக்கம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்து வருகின்றன.
நயன்தாராவுக்கு வயசு அதிகமானாலும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருகின்றன. அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் ஒரு புதிய படத்தின் கதையை சொல்ல ரொம்ப பிடித்து போக ஓகே சொல்லி உண்டார்.
இது நயன்தாராவுக்கு 75 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் கதை என்னவென்றால் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் பெண் சமையல் செய்து மிகப்பெரிய ஹோட்டல் நடத்திய சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளித்து எப்படி வாழ்கிறார் என்பது தான் கதை. இதே போலவே ஒரு கதையைத்தான் நடிகர் அஜித்துக்கு விக்னேஷ் சிவன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மனிதன் சிறு ஹோட்டல் தொடங்கி மிகப்பெரிய ஹோட்டல் நடத்திய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல கதை அமைந்திருக்கிறதாம். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் காப்பி அடிக்கலாம் அதுக்குன்னு இப்படி அடிக்கக்கூடாது நீங்க அட்லீயே மிஞ்சி விடுவீங்க போல என கூறி இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்து வருகின்றனர்.